ரஷ்யாவின் வாஸ்டாக்னி நகரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்தார்.

 
Kim

ரஷ்யாவின் வாஸ்டாக்னி நகரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்தார்.

அரசு முறை பயணமாக ரஷ்யாவிற்கு வருகை தந்துள்ள கிம், புடினுடன் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு முதல் முறையாக கிம், வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

வழக்கம் போல் இந்த முறையும் விமான பயணத்தை தவிர்த்துவிட்டு, பிரத்யேக சொகுசு ரயில் மூலம் பலத்த பாதுகாப்புடன் கிம் ரஷ்யாவிற்கு வருகை தந்துள்ளார்.

கிம்மின் வெளிநாட்டு பயணத்தின் போதே, வடகொரியா இரண்டு ராக்கெட் சோதனைகளை மேற்கொண்டுள்ளது, ஜப்பான் மற்றும் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாஸ்டாக்னி காஸ்மோடிரோம் ராக்கெட் ஆய்வகத்தில் புடினை சந்திக்கும் கிம், ஏவுகணை சோதனைகள் குறித்து பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கொரியா, ஜப்பான், அமெரிக்காவுடன் தொடர்ந்து மோதல் போக்கில் உள்ள வடகொரியா, ரஷ்யாவுடன் நெருங்கி வர இந்த பயணம் உதவுமா என்கிற எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.

Tags

    Share this story