”பவர் பாயிண்ட்” ஆஸ்டின் காலமானார்!! பிரபலங்கள் இரங்கல்!!

 
Dennis Austin

தொழில்நுப்ட வளர்ச்சியில் கணினி மென்பொருள் துறை  வேகமான செயல்பாடுகளுக்கு பவர் பாயிண்ட் முக்கிய காரணியாக அமைந்துள்ளது. இதனை  உருவாக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்   அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் ஆஸ்டின் . இவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடும் அவதிப்பட்டு வந்தார்.

இவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவருக்கு வயது 76.  இவர்  1987ல் ஃபோர்தாட் நிறுவனத்தில் பணிபுரியும் போது, பவர் பாயிண்ட் LDG 1606  மென்பொருளை உருவாக்கினார். அதன் பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் 14 மில்லியன் டாலர்களுக்கு  இதனை கையகப்படுத்தியது.  அதன் பிறகு பவர் பாயிண்ட் மிக வேகமான மற்றும் பரவலான பயன்பாட்டுக்கு வந்தது.

உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் மென்பொருளாக தற்போது மாறியுள்ளது.  டென்னிஸ் ஆஸ்டின்  அமெரிக்காவில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.   நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் நேற்று உயிரிழந்ததாக அவரது மகன் மைக்கேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவரது மறைவுக்கு பிரபலங்கள், தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Tags

    Share this story