'அமெரிக்கா பிறருக்கு ஜனநாயகத்தை போதிக்க கூடாது" என்று கூறிய ரஷ்யா தலைவர்  புடின் ...

 
Putin

டொனால்ட் டிரம்பை ஆதரிப்பதில் தயக்கம் காட்டாத ரஷ்யாவின் தலைவர் விளாடிமிர் புடின்,முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகள் அவருக்கு நடப்பது அனைத்தும் அரசியல் நோக்கம் கொண்டவை என்று கூறினார்.விளாடிவோஸ்டாக்கில் நடந்த கிழக்கு பொருளாதார மன்றக் கூட்டத்தில் பேசிய ரஷ்ய ஜனாதிபதி,அமெரிக்காவின் ஜனநாயகம் குறித்து கிண்டலாகக் குறிப்பிடும்போது ட்ரம்புக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகள் அமெரிக்கா மற்றும் முழு உலக மக்கள் முன்னிலையில் தொடங்கப்பட்டன என்றும்,
அடுத்த ஜனாதிபதியாக யார் வந்தாலும் அமெரிக்காவுடனான ரஷ்யாவின் மோசமான உறவுகள் கணிசமாக மாற வாய்ப்பில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் ரஷ்யாவுக்கு எதிராக பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
ஜனாதிபதி யாராக இருந்தாலும் எதிர்காலத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை நாங்கள் சொல்வது கடினம், ஆனால் எதுவும் தீவிரமாக மாற வாய்ப்பில்லை" என்று விளாடிமிர் புதின் கூறினார்.2024-ம் ஆண்டு ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ரஷ்ய அதிபராக புடின் 4-வது முறையாக பதவி வகித்து வருகிறார்."தற்போதைய அமெரிக்காஅரசு  அமெரிக்க சமூகத்தை ரஷ்ய எதிர்ப்பு மனநிலையில் வழிநடத்திவருகின்றனர் " என்று ரஷ்ய தலைவர் கூறினார்

Tags

    Share this story