நியூயார்க்கில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி 49 நிமிடங்கள் தாமதம்...

 
US Open

நியூயார்க்கில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கோகோ காஃப் மற்றும் கரோலினா முச்சோவா இடையேயான ஆட்டம்  ஒரு சுற்றுச்சூழல் எதிர்ப்பாளர் "தனது கால்களை சிமென்ட் தரையில் ஒட்டியதால்" நிறுத்தப்பட்டது என்று  போட்டி அதிகாரிகள்  தெரிவித்தனர்.

அமெரிக்காவின் காஃப் மற்றும் செக்கியாவின் முச்சோவா இடையேயான போட்டி 49 நிமிடங்கள் தாமதமாகியதாக அமெரிக்க டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

ஈஸ்ட்டிங்க்ஷன் ரெபெல்லின்  என்ற சமூக போராட்ட குழு  இதற்கு தங்கள் தான்  காரணம் என்று  கூறியது ."செத்த கிரகத்தில் டென்னிஸ் வேண்டாம்" என்ற முழக்கத்தையம்  பயன்படுத்தியது.

எக்ஸ்டிங்க்ஷன் ரெபெல்லியன், எக்ஸ்ஆர் என்றும் அழைக்கப்படுகிறது, இது 2018 ஆம் ஆண்டு மத்திய லண்டனில் பாலங்களை மூடியது முதல், சுற்றுச்சூழல் தொடர்பாக பல  ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகிறது ...

Tags

    Share this story