அசத்தல்... 7 நிமிடங்களில் புற்றுநோய்க்கு சிகிச்சை!

 
ஊசி கொரோனா

புற்றுநோய் என்ற சொல்லை கேட்டதும் அதிர்ச்சியுடன் அச்சப்படாதவர்களே இருக்க முடியாது. உடல் ரீதியாக மட்டுமல்ல மன ரீதியாகவும் புற்றுநோய் ஆளை உருக்கிவிடும். ஒரு முறை ஏற்பட்டுவிட்டால் குணமடையவே முடியாது என்ற நிலை காணப்படுகிறது. இதற்கான மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
 இந்நிலையில் உலகிலேயே முதல்முறையாக இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதார சேவை  புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கக்கூடிய ஊசியை கண்டறிந்துள்ளது. இந்த ஊசியை போட்டால் 7 நிமிடங்களில் வேலை செய்ய ஆரம்பித்து விடும் என மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

புற்றுநோய்

இந்த ஊசியை பொதுபயன்பாட்டுக்கு கொண்டு வர  MHRA எனப்படும் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் NHS விண்ணப்பித்துள்ளது. அவர்கள் ஒப்புதல் அளித்துவிட்டால் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும். இங்கிலாந்து நாட்டில் நூற்றுக்கணக்கான புற்றுநோய் நோயாளிகளுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளிக்க உள்ளனர். 

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஊசியால் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் காலம் மூன்றில் ஒரு பங்காக குறையலாம். தற்போது புற்றுநோய் சிகிச்சைக்கு அடிஸோலிசூமாப்  என்ற மருந்து  பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இதனை  டிரிப்சில்  போட்டு மருந்தை உட்செலுத்தி விடுகின்றனர். இது போட்ட 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்தில் வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறது  . இந்நிலையில் தான் ஊசி மூலம் செலுத்தி விரைவாக வெறும் 7 நிமிடங்களில்  வேலை செய்ய வைக்க திட்டமிட்டுள்ளனர்.  

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி அறிமுகம்!!

இந்த  மருந்து மூலம் நுரையீரல், மார்பு, கல்லீரல், சிறுநீர்ப்பை என பல்வேறு விதமான புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கலாம்.  இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் 3600பேர் அடிஸோலிசூமாப் மருந்தை உபயோகப்படுத்தி வருகின்றனர்.  தற்போது புற்றுநோய் ஊசி கண்டுபிடிக்கப்பட்டதால் இன்னும் பல பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும். அதுமட்டுமின்றி கீமோதெரபி சிகிச்சைக்கு கூடுதல் நேரம் கிடைக்கும் என மருத்துவ உலகம் தெரிவிக்கிறது.  

Tags

    Share this story